போட்டியின் போது ஹர்திக் பாண்டியா அடித்த ஒரு சிக்ஸர், மின்னல் வேகத்தில் சென்று எல்லையில் நின்று கொண்டிருந்த கேமராமேன் மீது எதிர்பாராதவிதமாகப் பட்டது. இதனால் அந்த இடமே சற்று பரபரப்பானது. ஆட்டம் முடிந்த அடுத்த கணமே, அந்தச் சம்பவத்தை மறக்காமல் ஹர்திக் பாண்டியா உடனடியாக அந்த கேமராமேனைத் தேடிச் சென்றார். அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்த ஹர்திக், அவரை அன்போடு கட்டிப்பிடித்துத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
– Hardik Pandya smashed the six
– Ball hit the hard to cameraman
– After the innings, Hardik instantly came to meet him
– Hardik hugged the cameramanJust look at the cameraman’s reaction at the end; it’s so priceless. This small gesture from cricketers can make someone’s day… pic.twitter.com/stV156Og6K
— Tejash (@Tejashyyyyy) December 19, 2025
ஹர்திக்கின் இந்தத் திடீர் வருகையையும் அரவணைப்பையும் எதிர்பார்க்காத அந்த கேமராமேன், மிகுந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார். அவரது முகத்தில் தெரிந்த அந்தப் புன்னகையும் நெகிழ்ச்சியும் உண்மையிலேயே ‘விலைமதிப்பற்றது’.கிரிக்கெட் வீரர்களின் இது போன்ற சிறிய மனிதாபிமானச் செயல்கள், சாதாரண மனிதர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சிறந்த தருணமாக மாறிவிடுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.
