“அந்த கடவுளே மயங்கிடுவாரு போல” பக்திப் பரவசத்தில் பள்ளி மாணவன்… இணையத்தைக் கவரும் பள்ளிக் கால இறைவணக்க வீடியோ…!!

By Soundarya on மார்கழி 20, 2025

Spread the love
ஹரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள யதுவன்ஷி சிக்ஷா நிகேதன் (Yaduvanshi Shiksha Niketan) பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிறுவனின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளியின் காலை இறைவணக்கத்தின் (Morning Prayer) போது எடுக்கப்பட்ட அந்தக் காணொளி, இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. பல இணையதளப் பயனர்கள் இந்தக் காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தக் காணொளியைக் கண்ட இணையதளப் பயனர்கள், அதில் இடம்பெற்றிருந்த சிறுவனின் பக்தியையும் அப்பாவித்தனத்தையும் பாராட்டி வருகின்றனர். “கடவுளிடம் பேசுவது என்பது இதுதான்” என்றும், “குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதற்குச் சான்று இந்தச் சிறுவன்” என்றும் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த மனதைக் கவரும் காணொளி அனைத்து சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி, பலரது இதயங்களை வென்றுள்ளது.