Categories: சினிமா

பல கோடி மதிப்புள்ள வீடு, சொகுசு கார்.. 5 கோடி சம்பளம்.. சவுத் குயின் த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Spread the love

சவுத் இந்தியன் குயினாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவர் இன்று தன்னுடைய 41 வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜோடி. இந்த திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்தவர் திரிஷா. அதனைத் தொடர்ந்து மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல சூப்பர் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார். இடையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலமாக ரிஎன்றி கொடுத்தார். குந்தவை கதாபாத்திரம் இவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு திரைப்படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். திரிஷா விளம்பர படங்களில் மாதம் 60 லட்சம் ஆண்டுக்கு 9 கோடி சம்பாதித்து வருகின்றார். நடிகை திரிஷாவுக்கு சொந்தமாக 6 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா சென்னையில் உள்ளது.

அந்த வீட்டில் தற்போது அவர் வசித்து வருகிறார். ஆந்திராவிலும் இவருக்கு ஒரு வீடு உள்ளது. அதுமட்டுமில்லாமல் 60 லட்சம் மதிப்புள்ள ரெயின்ஸ் ரோவர், 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் 40 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் வைத்திருக்கிறார் நடிகை திரிஷா. மொத்தம் 85 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்கள் திரிஷாவிடம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு விடாமுயற்சியிலிருந்து ஏதாவது அப்டேட் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் த்ரிஷாவுக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்,

Mahalakshmi

Recent Posts

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

7 seconds ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

12 minutes ago

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

17 minutes ago

பெற்றோர் பேச்சை கேட்கலைனா இதுதான் கதி..! திருமணமான 6 மாதத்தில் எல்லாமே போச்சு.. “வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேன்” புலம்பி அழும் பெண்..!!

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…

32 minutes ago

“வேலை போனா போகுது நிம்மதிதான் முக்கியம்” வேலையை உதறிவிட்டு இளம்பெண் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்..!!

குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…

36 minutes ago