என்ன பாப்பா இது…? கழுத்தில் சிக்கிய பிளாஸ்டிக் வாளியின் கம்பி… தவித்த சிறுமி… பதற்றப்படாமல் செயல்பட்ட தாய்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 22, 2026

Spread the love

சிறுமி பிளாஸ்டிக் வாளியின் கைப்பிடி கம்பியில் சிக்கிக்கொண்டு தவித்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி ஆபத்தான சூழலில் மாட்டிக்கொண்டதைக் கண்டு தாய் நிலைதடுமாறிப் பயந்தபோதிலும், உடனடியாகச் சாதுரியமாகவும் வேகமாகவும் செயல்பட்டுத் தன் குழந்தையைப் பத்திரமாக மீட்டுள்ளார்.

அந்தத் தாயின் சமயோசித புத்தியாலும் துரித நடவடிக்கையாலும் சிறுமி எவ்விதக் காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். இக்கட்டான மற்றும் பதற்றமான சூழலிலும் பயந்து முடங்கிவிடாமல் குழந்தையைக் காப்பாற்றிய அந்தத் தாயின் வீரம் மற்றும் சாமர்த்தியத்தைப் பாராட்டி, இணையத்தில் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.