அடச்சீ… நீங்கெல்லாம் மனுஷங்களா… பணத்தை வாங்கிட்டு வித்துட்டோம்… முதியவரை மணக்க மறுத்த இளம்பெண்… வளர்ப்பு மகளின் ரகசிய உறுப்பில் கொதிக்கும் வெந்நீர் ஊற்றி… சித்ரவதை செய்த கொடூர தந்தை… ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஆவணி 22, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது சிற்றன்னை மற்றும் மாற்றாந்தந்தையால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணை 3 லட்ச ரூபாய்க்கு ஒரு முதியவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த கட்டாய திருமணத்திற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த வளர்ப்பு பெற்றோர் கொதிக்கும் வெந்நீரை அவர் மீது ஊற்றி உடலைச் சுட்டுப் பொசுக்கியுள்ளனர்.

இக்கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, அப்பெண் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையிலும், அவருக்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படாமல் வீட்டிலேயே முடக்கி வைக்கப்பட்டார். வெளியே சென்றால் விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்பதால், அவர் சிகிச்சை பெறச் செல்வதை சிற்றன்னையும் மாற்றாந்தந்தையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். பெற்றோர் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இந்த அநீதி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

https://twitter.com/madanmohansoni/status/2090809146203336714/video/1

   

தற்போது அந்த இளம் பெண் மீட்கப்பட்டு, மிக மோசமான நிலையில் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் சம்மதமின்றி அவரை பணத்துக்காக விற்க முயன்றதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கொடூரமாகத் தாக்கியதும் அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.