திக் திக்… வங்கி வாசலில் மனைவியை சுட்டுக்கொன்ற கொடூர கணவன்… “அடுத்து நாங்க ரெண்டு பேரும்…” கதறவிட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்… லக்னோவில் நடங்கவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஆவணி 22, 2026

Spread the love

லக்னோவின் கோமதி நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி வாசலில், எஸ்பிஐ ஊழியரான மானஸ் வாஜ்பாய், தனது மனைவி திவ்யா மிஸ்ராவைத் தடுத்து நிறுத்தித் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்த இவர்கள் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், திவ்யா நடத்தை மீது சந்தேகப்பட்டு மானஸ் இக்கொடூரத்தைச் செய்துள்ளார். வங்கிக்கு வெளியே நடந்த தகராறின் போது சக ஊழியர்கள் தடுக்க முயன்றபோதிலும், மானஸ் திவ்யாவைத் தாக்கிச் சுட்டதால் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மனைவியைச் சுட்ட சில நிமிடங்களிலேயே வீட்டிற்குத் திரும்பிய மானஸ், “என்னைக் ஏமாற்றிய மனைவியைக் கொன்றுவிட்டேன், அடுத்து என்னையும் என் சகோதரியையும் கொல்லப்போகிறேன்” என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட தனது 28 வயது சகோதரி சிவாவையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, மானஸும் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்திற்கு திவ்யாவின் சகோதரி பிரக்யா மற்றும் அவரது கணவர் பாரத் ஆகியோரே காரணம் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

   

சம்பவம் நடந்த வீட்டிற்குள் நுழைந்த மானஸ், தொலைக்காட்சிப் பெட்டியில் அனுமான் சாலிசாவை அதிக சத்தத்தில் ஒளிரவிட்டு கதவைப் பூட்டியுள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளனர். குடும்பத் தகராறே இந்தத் தொடர் கொலை மற்றும் தற்கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ள லக்னோ காவல்துறையினர், இதுகுறித்து மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.