வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த TVK தலைவர்.. பார்க்க முடியாமல் வாசலோடு திரும்பிய சோகம்.. என்ன ஆனது..?

By Ranjith Kumar

Updated on:

தைசை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமியின் உடலை காண வந்த விஜய் அவர்கள் கூட்ட நெரிசலில் காண முடியாமல் திரும்பி சென்று விட்டாராம். தைசை துறைசாமியின் மகனான வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலா சென்ற போது கார் விபத்தில் சிக்கி இறந்தது விட்டார், கார் டிரைவர் தன்ஜினுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கார் நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதில் கார் ஓட்டுநர் சம்பவத்தில் உயிரிழந்தார். மேலும், காரில் பயணம் செய்த வெற்றியின் நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துமனையில்அனுமதிக்கப்பட்டார்.

வெற்றியின் உடல் பல நாட்களாக தேடியும் கிடைக்காததால், தனது மகன் வெற்றி துரைசாமியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு, ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்து இருந்தார்..இதையடுத்து, வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு, சட்லஜ் நதியில் 6 கி.மீ தொலைவில் கிடைத்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் விமானம் மூலம், சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இன்று மாலை 5 மணி அளவில் கண்ணம்மா பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இச்சம்பவத்தை அறிந்த வெற்றி துரைசாமிக்கு அஞ்சலி செலுத்த சைதாப்பேட்டைக்கு சென்ற டி.வி.கே தலைவர் விஜய், கூட்டம் அதிகமாக இருந்ததால் அஞ்சலி செலுத்த முடியாமல் செய்யாமல் புறப்பட்டார். பின்னர் கூட்டம் இல்லாதபோது மயானத்திற்கு சென்று வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முயன்றும் விஜய் முடியாமல் புறப்பட்டுச் சென்றதாக விஜய் தரப்பில் புஸ்ஸிஆனந்த் தெரிவித்திருந்தார். விஜய் அவர்கள் மனம் உடைந்து இருந்த சைதை துரைசாமியிடம் இரங்கல் தெரிவித்தார் புசிய ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.

author avatar
Ranjith Kumar