இரண்டு முறை இறங்கி வந்த வைரமுத்து… ஆனாலும் அவமானப்படுத்திய இளையராஜா.. இனிமேல் அவர்கள் சேர வாய்ப்பே இல்லையா..!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் சில கலைஞர்கள் பணியாற்றினால் அவர்கள் மூலம் வெளிவரும் படைப்பு எக்காலத்துக்குமான பொக்கிஷமாக இருக்கும். அதில் தலைசிறந்த இணை என்று இளையராஜா- வைரமுத்து இணையை சொல்லலாம். இருவரும் இணைந்து பணியாற்றியது வெறும் 6 ஆண்டுகளே என்றாலும் அவர்கள் கொடுத்த பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்பவையாக இன்றும் கொண்டாடப்படுகின்றன.

1980 ஆம் ஆண்டு தான் இசையமைத்த நிழல்கள் படத்தின் மூலம் வைரமுத்துவை அறிமுகப்படுத்தினார் இளையராஜா. அந்த படத்தில் அவர் எழுதிய பாடல்கள் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றன. அதன் பிறகு தனது படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுத்தார்.

   

இளையராஜா- வைரமுத்து- பாரதிராஜா ஆகிய மூவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் காலத்தால் அழியாதவையாக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. ஆனால் படைப்பாளிகளுக்குள் எழும் தங்கள் படைப்பு குறித்த கர்வம் காரணமாக இளையராஜாவும் வைரமுத்துவும் 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிந்தனர். அதன் பிறகு எத்தனையோ பேர் அவர்களை சேர்த்து வைக்க முயன்றும் அது நடக்கவில்லை.

இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி இருவரும் இனிமேல் சேர வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.  இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ வைரமுத்து இரண்டு முறை இளையராஜாவோடு சமாதானம் ஆக இறங்கி வந்தார். முதல் முறை இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவின் திருமணத்துக்கு நேரில் வந்து தங்கச் சங்கிலி ஒன்றை அளித்து வாழ்த்தினார். ஆனால் அவரை இளையராஜா வரவேற்கக் கூட இல்லை.

அதன் பின்னர் இளையராஜாவின் மனைவி ஜீவா இறந்தபோதும் துக்கம் விசாரிக்க வைரமுத்து வந்தார். அப்போது இளையராஜாவின் கையைப் பிடித்து ஆறுதல் சொல்ல சென்றார். ஆனால் இளையராஜா வைரமுத்துவின் கையை உதறிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு வைரமுத்துவும் தனது கௌரவத்தை விட்டுத்தர விரும்பவில்லை. அதன் பிறகு அவர் இளையராஜாவை சந்திக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.

அதனால்தான் சமீபத்தில் இளையராஜாவின் மகள் பவதாரணி இறந்தபோது கூட அவர் நேரில் செல்லாமல் சமூகவலைதளத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டதோடு நிறுத்திக் கொண்டார்” எனக் கூறியுள்ளார். இதனால் இனிமேல் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.

author avatar