ஐயோ… IIT-க்கே விசிட் அடித்த ஹேக்கர்… இணையதளத்தில் திடீர் மெசேஜ்… போலீஸ்க்கு போகாமல் ஐஐடி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு…!!

By Swetha on ஆடி 30, 2026

Spread the love

கான்பூர் ஐஐடி அறிமுகப்படுத்திய ‘இளநிலை சைபர் செக்யூரிட்டி’ படிப்பிற்கு கோடிங் மற்றும் சைபர் பாதுகாப்பில் ஆர்வமுள்ள ஒரு மாணவர் விண்ணப்பித்திருந்தார். தேவையான ஆவணங்களை பதிவேற்றி, கட்டணத்தையும் செலுத்தி சேர்க்கை செயல்முறையை நிறைவு செய்த போதிலும், தேர்வுப் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இதனால், சைபர் பாதுகாப்பில் தனக்குள்ள திறமையை நிரூபிக்க எண்ணிய அம்மாணவர், கான்பூர் மற்றும் சென்னை ஐஐடி-யின் இணையதளங்களை ஹேக் செய்து முடக்கினார். மேலும், தான் யாருக்கும் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்றும், தனக்கு ஒரு நியாயமான வாய்ப்பு மட்டுமே தேவை என்றும் அதில் செய்தியாகப் பதிவிட்டார்.

இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய கான்பூர் ஐஐடி இயக்குநர் மனிந்திர அகர்வால், அந்த மாணவருக்கு சைபர் பாதுகாப்பில் போதுமான முன் அனுபவம் இல்லாத காரணத்தினாலேயே தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார். மேலும், இந்த ஆண்டிற்கான சேர்க்கை செயல்முறைகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால், தற்போதைக்கு அவருக்கு உடனடியாகச் சேர்க்கை வழங்குவது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

   

இருப்பினும், அந்த மாணவரின் எதிர்காலத்தையும் திறமையையும் கருத்தில் கொண்டு, அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் என ஐஐடி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதற்கு பதிலாக, அவரை நேரில் அழைத்து முறையான சோதனைகள் மூலம் அவரது தொழில்நுட்பத் திறன்களை மதிப்பீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். அச்சோதனையில் மாணவர் தனது திறமையை நிரூபித்தால், அடுத்த மாணவர் சேர்க்கைச் சுற்றின் போது அவருக்கு நிச்சயம் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.