ஹரியானா மாநிலம் ஹான்சி பகுதியில் 25 வயதான உடற்பயிற்சிக் கூட உரிமையாளர் கபில் என்பவர், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வியாழக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் பவ்வாரா சவுக் அருகே உள்ள தனது உடற்பயிற்சிக் கூடத்திற்கு வெளியே, ஒரு பெண் உட்பட 5 முதல் 6 மாணவர்களுக்கு அவர் ‘ஸ்டெப்-அப்’ உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில், தொப்பி அணிந்திருந்த ஒரு நபர் வெறும் 5 வினாடிகளில் சுமார் 10 முறை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், கபில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதயத்தை உலுக்கும் இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அங்கிருந்த மாணவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. ஜிந்த் பகுதியைச் சேர்ந்த கபில் அண்மையில்தான் திருமணமானவர் என்பதும், தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக ஹான்சி பகுதிக்கு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் கொடூரத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…