ஆறு வருட கடின உழைப்பு ; படத்தை தயாரிக்க மாட்டேன் என கூறிய தயாரிப்பாளர்… பின்னாளில் தேசிய விருது வென்று சாதனை

By Deepika on மார்ச் 24, 2024

Spread the love

 

பயோபிக் படங்கள் செய்யும் ட்ரெண்ட் இப்போது போய்க்கொண்டிருக்கிறது. ராமானுஜம் தொடங்கி, பெரியார் என பல பெயரின் பயோபிக் வெளியானாலும், சாவித்ரி அம்மாவின் பயோபிக் தான் ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது. கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக வாழ்ந்து அனைவரையும் கவர்ந்தார், அந்த படத்திற்காக தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.

   

Dhanush wants to do ilaiyaraja biopic

   

இந்தநிலையில், பலருக்கும் பயோபிக் ஆசை வந்துவிட்டது. அந்த வரிசையில், இளையராஜாவின் பயோபிக் உருவாக இருக்கிறது. அதில் இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ் ராஜாவாக நடிக்க உள்ளார். அருணமாதேஸ்வரன் இயக்க தனுஷ் நடிக்கும் இந்தப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இளையராஜாவும் இதில் கலந்துகொண்டார். மூன்று வருடங்களுக்கு முன்பே தனுஷ் கரண் ஜோகர் பேட்டியில், இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை என தெரிவித்திருந்தார்.

 

Ilaiyaraja biopic puja

இந்தநிலையில் தற்போது அது நடக்கிறது. ஆனால் பயோபிக் என்றால் சும்மா இல்லை, அந்த நபர் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும், இவர்கள் என்ன செய்ய போகிறார்களோ என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். ஆனால் ஒரு தேசிய விருது பெற்ற பயோபிக்கை உருவாக்க ஒரு இயக்குனர் 6 வருடங்கள் அர்ப்பணித்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. அது என்ன படம் யார் அந்த இயக்குனர் என இந்த பதிவில் காண்போம்.

Adi Shankaracharya 1983

அது 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ஆதிசங்கராச்சாரியார் படம் தான், அதை இயக்கியவர் ஜீவி அய்யர். ஆதி சங்கராச்சாரியார் என்ற படத்தை இயக்க வேண்டும் என்ற விதையை பி.எஸ்.ரங்கா என்ற தயாரிப்பாளர். 1978 ஆம் ஆண்டு ரங்கா ஜீவி அய்யரை அழைத்து ஆதி சங்கராச்சாரியார் பற்றி படம் இயக்க வேண்டும் என கேட்டு கொண்டார். ஆனால் இப்படிப்பட்ட படத்தை இயக்க எவ்வளவு ஆராய்ச்சி தேவைப்படும், அதனால் இதுகுறித்த ஆராய்ச்சியில் இறங்கினார் ஜீவி. இப்போது போல் அப்போது இல்லை, ஆதி சங்கராச்சாரியார் பாரி முழுக்க தெரிந்து கொண்டு அதை தொகுப்பதற்கே ஜீவிக்கு ஆறு ஆண்டுகள் ஆனது.

Adi Shankaracharya 1983

ஆறு வருடங்கள் கழித்து கதையோடு ரங்காவை அணுகிய ஜீவிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. ரங்கா அந்தப்படத்தை தயாரிக்க தயாராக இல்லை. ஆனால் ஜீவிக்கு இந்தப்படத்தை எடுத்தாக வேண்டும் என்ற ஆசை, அதனால் இதை சமஸ்கிருதத்தில் எடுப்போம் என முடிவு செய்தார். இதனால் NFDC யை அணுகினர். ஆனால் சமஸ்கிருதத்தில் எடுக்க அவர்கள் தயாராக இல்லை, காரணம் சமஸ்கிருதத்தில் எடுத்தால் பெரிதாக மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று தான். ஆனால் ஒருவழியாக அதை எடுத்து வெற்றியும் கண்டார் ஜீவி. பல விருதுகளை வென்ற ஜீவி அய்யருக்கு இந்தப்படம் தேசிய விருதையும் பெற்று தந்தது.