நள்ளிரவில் அதிர்ச்சி..! நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப்.. வெள்ளை மாளிகை விருந்தில் அடுத்தடுத்து வெடித்த துப்பாக்கி குண்டுகள்…!!

Spread the love

வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நேற்று இரவு (ஏப்ரல் 25, 2026) வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கான வருடாந்திர இரவு விருந்து நடைபெற்றது. இந்த விழாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி தொடங்கிச் சிறிது நேரத்திலேயே ஓட்டல் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு டிரம்ப், வான்ஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைப் பத்திரமாக வெளியேற்றிப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையைப் பாராட்டியுள்ள அவர், நிலைமை சீரானதும் திட்டமிட்டபடி நிகழ்ச்சியைத் தொடரத் தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

“நல்லா பண்றீங்க… தினமும் உங்கள பத்திதான் பேச்சு…!” – முதலமைச்சர் விஜய்க்கு போன் போட்டு … வாழ்த்திய ரங்கசாமி…!!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் வேளையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து…

9 minutes ago

தமிழகமே உஷார்…! வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஆபத்து… பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு…!

டெங்கு மற்றும் மலேரியாவை உருவாக்கும் கொசுக்கள் முக்கியமாக தேங்கி நிற்கும் தூய்மையான மற்றும் அசுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.…

24 minutes ago

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

47 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

1 மணத்தியாலம் ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

1 மணத்தியாலம் ago