Categories: சினிமா

விஞ்ஞானத்தில் மட்டும் இல்லாமல் விவசாயத்திலும் சாதனை படைத்த ஜிடி நாயுடு.. ஆங்கிலேயர்களை திரும்பி பார்க்க வைத்த யுத்தி..!

Spread the love

ஜிடி நாயுடு என்று பெருமையாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை. இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை நிகழ்த்தி அமெரிக்கர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்த ஜிடி நாயுடு. தன் இளம் வயதில் படிப்பில் அதிகம் நாட்டம் இல்லாதவராக இருந்தார்.

எழுதப் படிக்கத் தெரிந்த இவர் தனக்கு விருப்பமான நூல்களை படித்து அறிவுத்திறனை வளர்த்து வந்தார். இளம் வயதில் கோவையில் ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தால் ஜிடி நாயுடு. அந்தத் தொழிலின் நுட்பங்களை கண்டறிந்து பின்னர் திருப்பூரில் பருத்தி தொழிற்சாலையை நிறுவினார். அந்த சமயத்தில் முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காரணத்தினால் பருத்தி தொழில் சூடு பிடித்தது.

தன்னுடைய வர்த்தக திறமையால் குறுகிய காலத்தில் லட்சாதிபதிகளில் ஒருவராக மாறினார் ஜிடி நாயுடு. தனி முதலாளியாக இருக்க விரும்பாத ஜிடி நாயுடு கூட்டு சேர்ந்து பல நிறுவனத்தை தொடங்கினார். அந்த நாட்களில் பணிகளுக்கான வசதிகள், ஓட்டுநர் தங்கும் இடம் என அனைத்தையும் செய்து காட்டினார். ஜிடி நாயுடு பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து ஆங்கிலேயர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர்.

தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தையும் நம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்பதால் தன் பெயரில் எதையும் பதிவு செய்து கொள்ளாமல் இலவச பயன்பாட்டிற்கு வைத்திருந்தார். நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் நம் நாட்டிற்கு பயன்படாமல் போனதற்கு காரணம் அரசு அதிகாரி செலுத்தியதால்தான். அன்றைய தினத்தில் அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராக இருந்தாலும் அவர் மீது வரி எய் ப்பு என்று அவப்பெயரும் சொல்லப்பட்டது.

இதனால் மனமுடைந்து போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதை காட்டிலும் வெறுமென இருந்து போகலாம் என்று ஒரு பைசா கூட வருமான வரியை என் பெயரால் செலுத்த மாட்டேன் என்று கூறிவிட்டார். அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர மோட்டார் தொழில் மட்டும் இல்லாமல் விவசாயத்திலும் பல சாதனைகளை செய்து வியக்க வைத்திருக்கின்றார். விதையில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவர் கண்டுபிடித்தது.

சோளச்செடிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி சிறிது காலத்திலேயே 26 கிளையுடன் 18 அடி உயரத்திற்கு வளர செய்தார். சோளச்செடியில் பொதுவாக 3 அல்லது 4 கதிர்கள் இருக்கும். இவர் தனது திறமையால் 39 கதிர்கள் வரை வளர செய்தார். அதோடு மட்டுமில்லாமல் பருத்திச் செடி, துவரை செடி என அனைத்திலும் தன்னுடைய ஆராய்ச்சியை தொடர்ந்து அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தார். இவரைப் பார்த்து வியந்து போன ஜெர்மனியர்கள் அவர் கண்டுபிடித்த அதிசய பருத்தி செடிக்கு நாயுடு காட்டன் என்றும் பெயர் சூட்டில் கௌரவித்தனர். இப்படி பல சாதனைகளை நிகழ்த்தி காட்டி இருக்கின்றார் ஜிடி நாயுடு.

Mahalakshmi

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

7 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

7 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

7 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago