5 வருட காதல்… திருமணம் முடிந்த அரை மணி நேரத்தில் மணமகன் திடீர் மரணம்… ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கிய துயரம்…!

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் நேற்று அரும்பாக்கம் ரேணுகாம்பாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்தோடு நேற்று திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் கோவில் வளாகத்தில் இருந்தபோது மணமகன் அஜித்குமார் இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்கிருந்த கோவில் குளத்தின் அருகே சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பாததால் குடும்பத்தினர் தேடிச்சென்ற போது கோவில் குளத்தில் அவர் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு குளத்தின் அருகே சென்ற போது கால் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அஜித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமண நாளில் மணக்கோலத்தில் மணமகன் உயிரிழந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“விஜய் அண்ணா கண்டிப்பா நல்லது செய்வார்” ஆனால் இது இருக்கும்.. நடிகர் ரஜினி மகள் சௌந்தர்யா சொன்ன விஷயம்..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…

5 மணத்தியாலங்கள் ago

“என் இன்னிங்ஸ பார்க்காதீங்க”… பஞ்சாப் மேட்ச் வெற்றிக்குப் பின் ரோஹித் சர்மா சொன்ன ‘அந்த’ ஒற்றை வார்த்தை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…

5 மணத்தியாலங்கள் ago

“ஒன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுங்க இல்லனா வாய மூடுங்க…” அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய விராட் கோலி… வைரலாகும் அந்த 2 நிமிட வீடியோ…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சித் திருப்பம்..! “ராணுவ தீர்வு கிடையாது… ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. டெல்லியில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பரபரப்பு பேச்சு..!!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…

5 மணத்தியாலங்கள் ago

எங்கடா இருந்துச்சி இவ்ளோ பணம்..? பண மழையில் நனைந்த பாடகர்.. குஜராத் பஜனை விழாவில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் – வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு வந்தது அதிகாரப்பூர்வ அழைப்பு…!!

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…

5 மணத்தியாலங்கள் ago