இல. கணேசன் மறைவு, சிபி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தை சேர்ந்த கவர்னரே இல்லை என்ற நிலை உருவானது. இதனால் எச்.ராஜா கவர்னராக வாய்ப்புள்ளது என சமீபத்தில் தகவல் வெளியானது. இந்தப் பட்டியலில் ஏற்கனவே கவர்னராக இருந்த தமிழிசையும் இருக்கிறாராம். இதற்காகவே அவர் அண்மையில் டெல்லி சென்றதாக கூறப்படுகின்றது. பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.
