திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் இயக்கத்தில் உருவான ரூம் பாய் திரைப்படத்தில் நிகில் என்பவர் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக அரண்மனை 4 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா நடித்துள்ளார். மேலும் இமான் அண்ணாச்சி, காத்து கருப்பு, கவிதா விஜயன், சாதனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரூம் பாய் திரைப்படத்தை ஏசிஎம் சினிமாஸ் தயாரித்துள்ளது. குடும்ப செண்டிமெண்ட் உடன் கூடிய குற்றப்புலனாய்வு திரில்லர் கதையாக உருவாகியுள்ள ரூம் பாய் திரைப்படத்திற்கு வேலன் சகாதேவி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகரான விஜய் சேதுபதி வெளியிட்டார். விரைவில் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Launching the Title & First Look of #ROOMBOY
Wishing the fresh team a great journey ahead@Acm_Cinema_001 @Nikhil_acm @Achandramurthy1 @jaganroyan @sonajalam @editMeeSundar @ImmanAnnachi @Birlabose1 @Arunraja51007 @chitty5225 @actorsamyzack @Prabhakar007 @sbrajar pic.twitter.com/ZdzeQP2V5k
— VijaySethupathi (@VijaySethuOffl) August 22, 2025
