தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,000 மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். மாணவர்களுடைய நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும், எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அரசு பள்ளிகளில் 2025-26 கல்வி வருடத்திற்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
பெற்றோர்கள் ஆர்வத்தோடு தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் புதிதாக நான்கு லட்சம் மாணவ மாணவியர்கள் சேர்ந்துள்ளார்கள். கே.வி வகுப்புகளில் 32,087 மாணவ மாணவிகளும், தமிழ் வழி ஒன்றாம் வகுப்பில் இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 563 மாணவ மாணவியர்களும், ஆங்கில வழி ஒன்றாம் வகுப்பில் 63 ஆயிரத்து 896 மாணவ மாணவியர்களும், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 9298 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 4 லட்சத்து 364 மாணவ மாணவியர்கள் அரசு பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பல்லகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 4 லட்சம். ஆயிரம் முத்தங்களோடு மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்” என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…
ஆளுங்கட்சியின் நிர்வாக திறனின்மையை மூடிமறைக்கவே எதிர்க்கட்சிகள் மீது வீண் பழிகளைச் சுமத்துவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.…
வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…