4 லட்சத்தை தாண்டிய அரசு பள்ளி மாணவர் சேர்க்கை … வறுமை அல்ல பெருமையின் அடையாளம்… அமைச்சர் அன்பில் மகேஷ்.பெருமிதம் .!!

By Soundarya on ஆடி 31, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,000 மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். மாணவர்களுடைய நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும், எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே  அரசு பள்ளிகளில் 2025-26 கல்வி வருடத்திற்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

பெற்றோர்கள் ஆர்வத்தோடு தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் புதிதாக நான்கு லட்சம் மாணவ மாணவியர்கள் சேர்ந்துள்ளார்கள். கே.வி வகுப்புகளில் 32,087 மாணவ மாணவிகளும், தமிழ் வழி ஒன்றாம் வகுப்பில் இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 563 மாணவ மாணவியர்களும், ஆங்கில வழி ஒன்றாம் வகுப்பில் 63 ஆயிரத்து 896 மாணவ மாணவியர்களும், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 9298 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 4 லட்சத்து 364 மாணவ மாணவியர்கள் அரசு பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள்.

   

இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பல்லகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 4 லட்சம். ஆயிரம் முத்தங்களோடு மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்” என்று தெரிவித்துள்ளார்.