ஐயோ… பாலியல் தொல்லையால் அரசுப் பள்ளி மாணவி தற்கொலை… ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம்…!!

By Swetha on புரட்டாதி 12, 2026

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 15 வயது மாணவி ஒருவர் பயின்று வந்துள்ளார். பள்ளிக்குச் செல்லும் வழியில் அல்லது பகுதியில் ஏற்பட்ட பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவி, வீட்டின் அருகே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்குப் போராடிய மாணவியை அவரது குடும்பத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அம்மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

   

மாணவியின் உயிரிழப்பைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரில் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு மேற்பார்வையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.