உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில் பெண் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். கரையில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளியான ஒரு வாலிபர் சிறிதும் யோசிக்காமல் களத்தில் இறங்கினார். தனது ஆடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு உடனடியாகத் தண்ணீரில் குதித்த அவர், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தார்.
உயிரைக் காப்பாற்றிய அந்த வாலிபர் கரைக்குத் திரும்பி வந்தபோதுதான் மனிதநேயமற்ற மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அவர் கழற்றி வைத்திருந்த ஆடைகளை சோதித்தபோது, அதில் இருந்த அவருடைய ஆண்ட்ராய்டு மொபைல் போன் மற்றும் 800 ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். ஆபத்தான சூழ்நிலையில் ஒரு உயிரைக் காப்பாற்றச் சென்றவரின் உடைமைகளையே யாரோ திருடிச் சென்றது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
https://twitter.com/ocjain4/status/2098349030204112954/video/1
ஆபத்தில் இருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்ற நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்த நிலையில், ஒரு எளிய தொழிலாளி காட்டிய துணிச்சலும் மனிதநேயமும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே வேளையில், உயிரைக் காப்பாற்றிய ஒருவனின் உடைமையை திருடிச் சென்ற அந்த இரக்கமற்ற செயல், சமூகத்தில் மனிதநேயம் எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.
