இன்ஸ்டா மெசேஜை நம்பி சென்ற பிளஸ்-2 மாணவி… வீட்டிற்கு வந்ததும் நின்றாத ரத்தப்போக்கு… பதறவைக்கும் தாம்பரம் சம்பவம்…..!

By Nanthini on புரட்டாதி 26, 2026

Spread the love

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது அரசுப் பள்ளி மாணவிக்கு, இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முத்துசாமி (22) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்த அந்த இளைஞர், கடந்த 24-ஆம் தேதி மாணவியை நேரில் சந்திக்க வேண்டும் எனத் தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். அதை நம்பி சந்திக்கச் சென்ற மாணவியை, தாம்பரம் அருகிலுள்ள ஆள்நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பிய மாணவிக்கு கடுமையான உடல்நலக் குறைவும், நிற்காத ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியை உடனடியாக தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கிளாம்பாக்கம் மகளிர் காவல் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

   

மாணவி அளித்த தகவலின் அடிப்படையில் முத்துசாமியைப் பிடித்துப் போலிஸார் விசாரணை நடத்தினர். அதில், இன்ஸ்டாகிராம் நட்பைப் பயன்படுத்தி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் மீது கடுமையான போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாம்பரம் பகுதியில் அண்மைக்காலமாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

   

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், இதுபோன்ற தொடர் குற்றங்கள் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக, வளர்ந்து வரும் சோஷியல் மீடியா யுகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் இணைய வழியில் யாரிடம் பழகுகிறார்கள் என்பதில் பெற்றோர் கூடுதல் விழிப்புணர்வோடும் கண்காணிப்போடும் இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது. அதேவேளையில், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் காவல்துறையினரும் தங்களது தீவிர நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.