மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், எவ்வித ஆதாரமும் இன்றி போக்சோ வழக்கு குறித்து பேசியதாகக் கூறி முதலமைச்சர் மீது திமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கைக் குறிப்பிட்டு அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பேசக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், அந்த வழிகாட்டுதல்களை முதல்வர் மீறியுள்ளதாக புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசிய வீடியோ ஆதாரங்களும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்தும் விசாரணையில் வித மீறல்கள் உறுதி செய்யப்பட்டால், விஜய்யின் முதலமைச்சர் பதவிக்கே சட்ட ரீதியான சிக்கல்கள் எழக்கூடும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
