அரசு ஊழியர்களுக்கு செக்.. இனி லேட்டா போனா ஆப்பு தான்..! ஜூன் 1 முதல் அமலாகிறது..! CM விஜய் அதிரடி உத்தரவு…!

Spread the love

தமிழக அரசுத் துறைகளில் பணி ஒழுங்கு மற்றும் நேர மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில், ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் மற்றும் முக அடையாள (Face ID) வருகைப்பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத் துறையின் (HRM) அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த டிஜிட்டல் வருகைப்பதிவு முறை அமலுக்கு வருகிறது. தலைமைச் செயலக வரலாற்றிலேயே முக அங்கீகார முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

புதிய உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட துறையின் ஊழியர்கள் அனைவரும் காலை 10:00 மணிக்கு முன்பாக அலுவலகத்திற்கு வருகை தந்து, தங்களது வருகையை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும். மேலும், மறுஉத்தரவு வரும் வரை இந்த டிஜிட்டல் முறையுடன் சேர்த்து தற்போதைய வழக்கமான கையேடு (Manual) வருகைப் பதிவேட்டிலும் ஊழியர்கள் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பணி நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் தங்களின் அடையாள அட்டையை (ID Card) கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளத

அரசு ஊழியர்கள் சிலர் தொடர்ந்து தாமதமாக பணிக்கு வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டபோது ஊழியர்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது அனைத்துப் பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. இந்த டிஜிட்டல் வருகைப்பதிவு முறை, வரும் மாதங்களில் தலைமைச் செயலகத்தின் மற்ற துறைகளுக்கும், தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Swetha

Recent Posts

ஒடிசாவில் அதிர்ச்சி.. காதலை நிராகரித்த பெண்.. ஆபீஸின் லேடிஸ் டாய்லெட்டில் ஸ்பை கேமரா வைத்த அதிகாரி கைது…!

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…

11 minutes ago

“என் மனைவி கர்ப்பிணி..!” ஆளுநர் வருகைக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. நடுச்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கணவன்.. பெங்களூருவில் பரபரப்பு…!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…

21 minutes ago

தோசை பார்சல் வாங்க வந்தவர் கொடுத்த பகீர்.. கண்ணில் மிளகாய் பொடியை தூவி நடந்த கொடூரம்… கதறிய ஹோட்டல் உரிமையாளர்..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…

25 minutes ago

BIG BREAKING: அண்ணாமலை விலகல்..? பாஜகவில் பெரும் பரபரப்பு..!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…

30 minutes ago

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

36 minutes ago