BREAKING: அரசு பஸ் கவிழ்ந்தது…. 15 பயணிகளின் நிலை…. தமிழகத்தில் அதிகாலையிலேயே சோகம்…!

By Nanthini on புரட்டாதி 6, 2026

Spread the love

வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து, தஞ்சாவூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவத்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.