அதிமுகவுக்கு செக் வைத்த அறிவாலயம்… பாமகவுக்கு சீக்ரெட் தூது…. கசிந்தது DMK-வின் பிளான் B…. தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்…!

By Nanthini on புரட்டாதி 6, 2026

Spread the love

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை கூட்டணிக்கு இழுக்க  திமுக தீவிர காய்நகர்த்தல்களில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி காரணமாக, அதிருப்தியடைந்துள்ள கூட்டணிக் கட்சிகள் மீண்டும் தங்களுடன் இணைய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அறிவாலயம், தற்போது தனது ‘பிளான் B’ திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

இதன்படி, அதிமுக கூட்டணியில் அங்கமாக இருக்கும் பாமகவை தங்கள் பக்கம் இழுத்து, வட மாவட்டங்களில் திருமாவளவனின் விசிக வெளியேற்றத்தால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கசப்புணர்வால் அதிமுகவிற்குள் மீண்டும் நுழைய (ரீ-எண்ட்ரி) தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும் திமுக தரப்பில் இருந்து ரகசியத் தூது அனுப்பப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.