வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்றால், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களையும் மீண்டும் ஒன்று சேர்ப்பது மிகவும் அவசியம் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
அவர்களின் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, பிரிந்து சென்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்து மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால், இக்கூட்டம் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
