விதியின் கொடூர விளையாட்டு..! பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்… பெரும் சோகம்..!

By Soundarya on வைகாசி 31, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூன்று அரசுப் பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் பேருந்து ஆகியவை அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி கொடூர விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர சாலை விபத்தில், எதிர்பாராதவிதமாக ஒரு அரசுப் பேருந்தின் ஓட்டுநரான கண்ணன் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்த ஓட்டுநர் கண்ணன், சமீபத்தில் தான் நீலகிரி அரசுப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பணி மாறுதல் (Transfer) பெற்று மேட்டுப்பாளையம் கிளைக்கு மாற்றலாகியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது புதிய கிளையில் முதல் நாளாகப் பணியில் சேர்ந்த சில மணி நேரங்களிலேயே இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்களிடமும் அவரது குடும்பத்தினரிடமும் ஈடுசெய்ய முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.