Categories: சினிமா

சூட்டிங் ஸ்பாட்ல சகிலாவிடம் தன் குறும்புத்தனத்தை காண்பித்த கவுண்டமணி!.. இதனால் தலையே சுற்றி நின்ற சகிலா!..

Spread the love

காமெடி கிங்காக சினிமாவில் வலம் வந்த “கவுண்டமணி” பல பல லூட்டிகளை அடித்திருக்கிறார். பல பேரை பங்கமாக கலாய்த்து கூட இருப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். ஆனால் அவர் திரையில் மட்டுமல்ல சூட்டிங் ஸ்பாட்டிலும் பல சேட்டைகளை செய்வார். 1997 ஆம் ஆண்டு காமெடி மற்றும் காதல் படமாக வெளிவந்த “நேசம்” படத்தை சக்திவேல் அவர்கள் இயக்கி அஜித், கவுண்டமணி, மணிவண்ணன், மகேஸ்வரி, சகிலா, விசு, செந்தில் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இப்படம் பெரிதளவு அஜித் அவர்களுக்கு பெயரை பெற்று தந்தது.

இப்படத்தில் கவுண்டமணி செந்தில் மற்றும் மணிவண்ணன் காமெடி படத்தில் காமெடி போர்க்களமாகவே மாறி இருந்தது. தற்போதைய சகிலா தனியார் நிகழ்ச்சியில் இப்படத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார்; படப்பிடிப்பின் போது கவுண்டமணி அவர்கள் அடிக்கும் லூட்டி, கலாட்டாவையும் பற்றி சில விஷயங்களை வெளியிட்டு இருக்கிறார், சகிலா: கவுண்டமணி என்கிட்ட வந்து இந்த பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு சொல்லி கொடுத்தாரு, அதை நானும் பேரிச்சம் பழம்னு நம்பி சாப்பிட்டேன்,

ஜோதிலட்சுமி கொடுத்து சாப்பிட வச்சான், அந்த டைம்ல தான் “நட்சத்திர பங்களா நிக்காதடி சிங்கிளா” என்ற பாட்டை எடுத்துட்டு இருந்தாங்க. நாங்க இதை சாப்பிட்டு அந்தப் பாட்டுல போய் டான்ஸ் ஆடும் போது தல எல்லாம் சுத்தி நிக்கவே முடியல, டைரக்டர் வந்து வயசான அந்த அம்மாவை அழகா ஆடுறாங்க உங்களுக்கு என்னனு சொல்லி திட்டுனாங்க. தெரியல சார் தல எல்லாம் சுத்துது அப்படின்னு சொன்னேன், அப்பதான் இயக்குனர் சொன்னாரு கவுண்டமணி கொடுத்தது வெறும் பேரிச்சம்பழம் இல்ல அது ஒயின்ல ஊற வச்சு பேரிச்சம் பழம்,

அதனால சாப்பிட்டா அப்படித்தான் இருக்கும் டைரக்டர் சொன்னாரு. எனக்கு அப்பதான் தெரிஞ்சது இவர் வெறும் பேரிச்சம்பழம்னு சொல்லி இப்படி ஒரு விஷயத்தை கொடுத்து சாப்பிட வச்சு, எங்கிட்ட அவர் சேட்டைய காமிச்சிட்டாரு. என்னால அந்த பாட்டுக்கு ஒழுங்கா ஆடவே முடியல, தல எல்லாம் சுற்றுச்சு. என்று கவுண்டமணி அவர்கள் லூட்டியான குறும்புத்தன பற்றி ஷகிலா கவுண்டமணியின் விளையாட்டு தனத்தை வெளியிட்டிருந்தார்.

Ranjith Kumar

Recent Posts

FLASH NEWS: விஜய் அரசுக்கு வந்த ஆபத்து.. ரூ.35 கோடி பேரம்…. மாட்டிக்கொண்ட செந்தில் பாலாஜி? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்…

4 minutes ago

அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் ஏன் அடுத்தடுத்து விலகுகிறார்கள்?… அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செங்கோட்டையன் வைத்த அதிரடி செக்…!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப்…

6 minutes ago

கிருஷ்ணகிரியில் அதிரவைக்கும் சம்பவம்… நீதிமன்றம் சென்ற நபர் காட்டில் சடலமாக மீட்பு…. 4 நாட்களுக்குப் பின் வெளியானபகிர் தகவல்…!

கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த…

25 minutes ago

26 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய்-கருணாநிதி செய்த மிரட்டல் சம்பவம்… “டைடல் பார்க்” பெயருக்கு பின்னால் இருக்கும் அந்த ரகசியம்… தயநிதி மாறன் வெளியிட்ட அந்த வீடியோ…!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…

36 minutes ago

“இது அமைச்சர் பதவிக்கு அழகல்ல… மேடையிலேயே வெளுத்து வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சி… பரபரக்கும் அரசியல் களம்…!”

கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள்…

43 minutes ago

BREAKING: திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி… சற்று முன் பரபரப்பு…தமிழா அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவனுக்குத் தமிழகத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என ஓமலூரில்…

52 minutes ago