Categories: சினிமா

இனிமேல் உன் படத்துக்குக் கதை எழுத மாட்டேன்… கலைவாணர் என் எஸ் கேவிடம் கோபித்துக் கொண்ட அண்ணா!

Spread the love

தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்டோர்களே மிகவும் மரியாதையாக நடத்திய நபர்களில் ஒருவர் என் எஸ் கே. நாடக மேடையில் இருந்து திரைப்படத்துக்குள் நுழைந்த அவர் அங்கும் தன்னுடைய நடிப்பால் புக்ழ் பெற்றார்.

முதலில் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் பின்னர் நாடக மேடைகளில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் சினிமாவிற்குள் நுழைந்தார். என் எஸ் கே மற்றொரு நல்ல குணம் அவரின் ஈகைதான். தமிழ் சினிமாவில் வள்ளல் என்று பெயர் பெற்ற எம் ஜி ஆருக்கு முன்னோடியாக இருந்தவர் என் எஸ் கே.

இவர் நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பு, இயக்கம் என பல்துறை வித்தகராக இருந்தார். எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசனை வைத்து சில படங்களை தயாரித்துள்ளார். மேடை நாடகங்களில் மட்டும் நடித்திருந்த அவரை நீங்கள் சினிமாவிலும் நடியுங்கள் என இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் வற்புறுத்தியுள்ளனர்.

முதலில் தயங்கிய அவருக்கு ஹாலிவுட்டில் எல்லாம் காமெடி நடிகர்களும் கதாநாயகர்களாக நடித்து வெற்றி கொடுத்துள்ளார்கள். அதனால் துணிந்து நடியுங்கள் என நம்பிக்கை அளித்துள்ளனர். அதன் பிறகே அவர் நடிக்க சம்மதித்துள்ளார்.

அப்படி அவர் நடித்தபடம்தான் நல்லதம்பி. அந்த படத்துக்காக அப்போது கதை எழுதுவதில் வித்தகராக இருந்த அறிஞர் அண்ணாவை அமர்த்தியுள்ளனர். கலைவாணரும் பகுத்தறிவு கருத்துகளில் ஆர்வம் உள்ளவர் என்பதால் அண்ணா கதை எழுத ஒத்துக்கொண்டுள்ளார். அப்படியே கதையையும் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்தக் கதையை படமாக்கும் போது சினிமாவுக்கு என்று சில மாற்றங்களை செய்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் என் எஸ் கேவின் மேடை நாடக நகைச்சுவை காட்சிகளையும் இணைத்துள்ளனர். இதனால் படம் ரிலீஸான பின்னர் அண்ணா அதைப் பார்த்து கடுப்பாகிவிட்டாராம். மேலும் என் எஸ் கே விடம் ‘இனிமேல் உன் படத்துக்குக் கதை எழுத மாட்டேன்” என்று கோபித்துக் கொண்டும் சென்றுவிட்டாராம்.

vinoth

Recent Posts

“உன்னைப்போல் ஆயிரம் பேரை பார்ப்பேன்… 7 மாத கர்ப்பிணி மனைவி சொன்ன ‘அந்த’ வார்த்தை… கணவனின் ஆயுள் தண்டனையைக் குறைத்த நீதிமன்றம்…!”

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…

14 minutes ago

“நீங்க கூட்டிட்டு வந்தா.. நாங்க கோட்டையில சீட் தருவோம்…!” – அதிமுகவை குறிவைத்து விஜய் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. அலறும் இபிஎஸ்…!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…

20 minutes ago

உஷார் மக்களே!… இலவசம்னு நம்பி ஏமாறாதீங்க… வாட்ஸ்அப்பில் பரவும் ‘ஏர்டெல் க்ரோத்’ மர்மம்… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை…!

வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…

21 minutes ago

“பொழுதுபோக்குக்காக இதைத்தான் செய்வேன்!”… மேடையிலேயே உண்மையை உடைத்த அதிபர் டிரம்ப்… ஷாக்கிங் பின்னணி…!!

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…

26 minutes ago

“நாங்க இருக்கோம்…! மீண்டும் வருவோம்…!” – லண்டன் செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…

33 minutes ago

இனி கம்மி காசுல விமானத்தில் பறக்கலாம்… ஆனா அந்த ஒரு கண்டிஷன் தான் ஷாக்கிங்…! இண்டிகோவின் அதிரடி அறிவிப்பு…!!

இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

37 minutes ago