Categories: சினிமா

இருக்குறதுலயே best-அ அனுபவிக்கணும்னு கவுண்டமணி நெனைப்பாரு… அதுக்குக் காரணம் இதுதான் – பார்த்திபன் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.

16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கு உடனேயே பெரிய வாய்ப்புகள் உருவாகிவிடவில்லை. கிடைத்த கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். 80 களுக்கு பிறகே அவர் செந்திலோடு இணைந்து தங்களுக்கென ஒரு ஸ்டைல் காமெடியை உருவாக்கினார்.

சினிமாவில் தனக்கு பிரேக் கிடைப்பதற்கு முன்பு கடுமையான வறுமையில் வாடினார் கவுண்டமணி. நாடகத்தில் நடித்துதான் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை ஓட்டவேண்டிய சூழலில் இருந்தார். 16 வயதினிலே படத்தில் பார்த்தாலே அவர் ஒல்லியான தோற்றத்தில்தான் காணப்படுவார்.

அதன் பின்னர் காமெடி சூப்பர் ஸ்டார் ஆனார். ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார். 7 கார் இல்லை, 10 கார்கள் வாங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரில் ஷூட்டிங் வந்து இறங்கினார். ஆடம்பரங்களை விரும்பாத கவுண்டமணி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பிடிவாதமாக இருந்தாராம்.

கவுண்டமணியின் இந்த குணம் பற்றி பேசியுள்ள பார்த்திபன் “கவுண்டமணி அண்ணனோடு நான் டாட்டா பிர்லா படத்தில் நடிக்கும்போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் ஒரு ஊரில் ஷூட்டிங் இருந்தால், அந்த ஊரில் இருக்கும் 7 ஸ்டார் ஓட்டலில்தான் தங்குவார். இருக்கிற உணவிலே சிறந்ததைதான் சாப்பிடுவார். அப்போதே அவர் ஒரு ராஜா போலதான் வாழ்ந்தார். அவருக்கு அதல்லாம் பிடித்திருந்தது. ஏனென்றால் வாழ்க்கையின் முதல் பகுதியில் அவர் சந்தித்த வறுமை அப்படி.

ஆனால் சினிமாவில் அவர் தன்னுடைய பரபரப்பை எல்லாம் இழந்தபின்னர் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை. இப்போதும் ஜாலியாக எங்கேயாவது வாக்கிங் போய்க் கொண்டு இருப்பார்.” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

1 மணத்தியாலம் ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

2 மணத்தியாலங்கள் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago