#image_title
பிரபல நடிகரான வெண்ணிற ஆடை மூர்த்தி ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1965-ஆம் ஆண்டு ரிலீசான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அன்றிலிருந்து இவர் வெண்ணிற ஆடை மூர்த்தி என அடையாளம் காணப்பட்டார்.
அதன் பிறகு காயத்ரி, பன்னீர் புஷ்பங்கள், ராஜா எங்க ராஜா, நான் சிகப்பு மனிதன், தங்கமணி ரங்கமணி, தங்கமான புருஷன், மைக்கேல் மதன காமராஜன், ரிக்ஷா மாமா, சிங்காரவேலன் சந்தைக்கு வந்த கிளி, லவ் பேர்ட்ஸ், அவள் வருவாளா உள்ளிட்ட ஏராளமான படங்களில் வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்துள்ளார். படங்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்துள்ளார். கமல்ஹாசன் மாலை சூடவா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
இந்த படத்திற்கு வெண்ணிற ஆடை மூர்த்தி தான் திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் சித்ராலயா என்ற திரைப்படவார இதழின் ஆசிரியராகவும் வேலை பார்த்துள்ளார். ஏறக்குறைய மூன்று தலைமுறைகளுக்கு மேலாக பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்துள்ளார். இவருடன் நடிக்காத முன்னணி நடிகர்களை இல்லை என்று சொல்லலாம். பொதுவாக இவர் பேசும் வசனங்கள் இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும்.
ஆனாலும் ரசிகர்கள் அதனை ரசிப்பார்கள். வசனத்தை காமெடியோடு சேர்த்து பேசி ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி பிரபல நடிகை என்பது உங்களுக்கு தெரியுமா? இவரது மனைவி பிரபல நடிகை மணிமாலா. அவர் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்தார். மேலும் சுஹாசினி நடித்த சிந்து பைரவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் மணிமாலா நடித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…