Categories: சினிமா

“இந்த படத்துக்கு செந்தில் வேண்டாம்யா, யோகி பாபுவ போடுவோம்…” கவுண்டமணி சொன்ன காரணம்!

Spread the love

1960-களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.

16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கு உடனேயே பெரிய வாய்ப்புகள் உருவாகிவிடவில்லை. கிடைத்த கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். 80 களுக்கு பிறகே அவர் செந்திலோடு இணைந்து தங்களுக்கென ஒரு ஸ்டைல் காமெடியை உருவாக்கினார்.

கவுண்டமணியின் பாணியைதான் தற்போது சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகிய இருவருமே ஃபாலோ பண்ணி வருகின்றனர். இடையில் கவுண்டமணி சில ஆண்டுகள் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.  ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் பழனிச்சாமி வாத்தியார் மற்றும் ஒத்த ஓட்டு முத்தையா ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

கவுண்டமணி பாணி நகைச்சுவை ஹிட்டாக கவுண்டமணி எந்த அளவுக்குக் காரணமோ அதே அளவுக்கு செந்திலும் காரணம். கவுண்டமணியின் ஆதிக்க உடல்மொழிக்கு நேரெதிராக செந்திலின் பணிவான ஆனால் குறும்புத்தனமான உடல்மொழி வித்தியாசமான- ஒரு முழுமையான நகைச்சுவைக் கூட்டணியாக உருவானது.

#image_title

ஆனால் 2000களுக்குப் பிறகு இந்த கூட்டணி பிரிந்தது. பிரிந்தது என்று சொல்வதை விட அதன் பிறகு இருவரும் சேர்ந்து படங்கள் பண்ணவில்லை என்று சொல்லலாம். அப்படியே வெகுசில படங்களில் நடித்தாலும் தனித்தனியாகதான் நடித்தார்கள். இதனால் அவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில்தான் கவுண்டமணி தற்போது நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் செந்திலை நடிக்க வைக்கலாம் என இயக்குனர் சாய் ராஜ்கோபால் கூறினாராம். ஆனால் அதை வேண்டாம் என மறுத்த கவுண்டமணி “மறுபடியும் செந்தில் போட்டா பழய ட்ரண்ட்டா இருக்கும்யா… புதுசா இருக்கும் யோகி பாபுவ போடுவோம்” என சொன்னாராம். இதை இயக்குனர் சாய் ராஜகோபால் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

“உங்க ஸ்பேஸ் டெக்னாலஜியை பாருங்க…” நடுரோட்டில் மெகா பள்ளம்… பைக்குடன் பாய்ந்த டெலிவரி பாய்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…

1 minute ago

“வாங்க பழகலாம்…” கவர்ச்சியாக பேசி மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பெண்…. கண்விழித்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…

41 minutes ago

“நாயுடன் தகாத உறவு…?” திருடனை பிடிக்க வைத்த கேமரா…. மனைவி வீடியோவை பார்த்து அதிர்ந்து போன கணவர்…. பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…

51 minutes ago

“மயக்க ஊசியும் 9 இன்சுலின் பாட்டில்களும்…” படுக்கையில் சடலமாக கிடந்த பெண் மருத்துவர்… டைரியில் சிக்கிய உருக்கமான கடிதம்…!!

புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வாசுதேவனின் 26 வயது மகள் டாக்டர் யோகலட்சுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்…

1 மணத்தியாலம் ago