முருகப்பெருமானை போலவே ஐயப்பனுக்கும் அறுபடை வீடு உண்டு… அவை என்னென்ன தெரியுமா…?

Spread the love

தமிழ் கடவுளாக கூறப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் என்றாலே நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடுகள்தான். எப்படி தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருக்கிறதோ அதேபோல சபரிமலை நாயகன் ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் இருக்கிறது. அவை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

ஐயப்பனின் அறுபடை வீடுகளாக கூறப்படுவது ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம் மற்றும் சபரிமலை என ஆறு கோவில்கள் ஆகும்.

1. ஆரியங்காவு: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதலில் ஆரியங்காவு கோவிலுக்கு செல்ல வேண்டும். மற்ற கோவிலில் ஐயப்பன் பிரம்மச்சாரியாகவே காட்சியளிப்பார். ஆனால் இந்த கோவிலில் ஐயப்பன் சௌராஷ்ட்ரா குலதேவியான புஷ்கலா தேவியுடன் அரசகோத்தில் காட்சியளிக்கிறார்.

2. அச்சன்கோவில்: அடுத்ததாக தரிசிக்க வேண்டிய இடம் அச்சன்கோவில். இந்த கோவிலில் இருக்கும் ஐயப்பன் விக்ரகம் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும். ஐயப்பன் போருக்கு பயன்படுத்திய வாள் இங்கே பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

3. குளத்துப்புழா: ஐயப்பன் பால்ய வயதில் இருப்பது போன்ற தோற்றத்தை கொண்டு இருக்கும் பாலகன் கோவில் தான் இந்த குளத்துப்புழா ஆகும்.

4. எருமேலி: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களும் தவிர்க்காமல் செல்லக்கூடிய ஒரு இடம் எருமேலி. இந்த கோவிலில் தான் ஐயப்பன் வேட்டைக்கு செல்லும் கோலத்தில் கையில் வில் மற்றும் அம்புகளை வைத்தவாறு காட்சியளிக்கிறார். 5.பந்தளம்: காட்டில் பாலகனாக கண்டெடுக்கப்பட்ட ஐயப்பன் மன்னன் ராஜசேகரனால் 12 வயது வரையிலும் அரண்மனையில் வளர்க்கப்பட்ட இடமாகும். பந்தளம் அரண்மனை சபரிமலையில் இருந்து சுமார் 88 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

6. சபரிமலை: ஐயப்பன் துறவறம் மேற்கொள்ள வில்லெடுத்து அம்பெய்தார். அந்த அம்பு வந்து விழுந்த இடமே சபரிமலை ஆகும். ஐயப்பனுக்கு மாலை போட்டு வரும் பக்தர்கள் அனைவரும் செல்லக்கூடிய இடம் தான் இந்த சபரிமலை. இங்கு தான் ஐயப்பன் தர்ம சாஸ்தாவாக இருக்கிறார். பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த ஆறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் புனித யாத்திரை சென்றதன் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

admin

Recent Posts

“‘ஏன்டா பள்ளிக்கு வரல…?” ஒற்றை கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர்…. அறைக்குள் புகுந்து அடித்து ரத்தகளரியாக்கிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 54 வயதான தலைமை ஆசிரியர் கர்னல் நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்குத் தொடர்ந்து…

6 minutes ago

மகனுக்காக அரசியலை விற்ற வைகோ..! “அன்று திராவிட இயக்கத்தின் போர்வாள்…. இன்று விஜய் ரசிகர் மன்ற தளபதி….” மல்லை சத்யாவின் காட்டமான பேச்சு….!!

திராவிட வெற்றி கழக தலைவரும், மதிமுகவின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான மல்லை சத்யா செய்தியாளர்களைச் சந்தித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

18 minutes ago

பேச்சுவார்த்தை இல்லையா…? முதல்வர் விஜய் – த்ரிஷா உறவில் திடீர் விரிசல்… பின்னணி என்ன…? வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட நிலையில், சிறப்பு விருந்தினராகத்…

26 minutes ago

“யாருக்கு ஆதரவு…?” சஸ்பென்ஸ் வைக்கும் ஜி.கே.வாசன்… இடைத்தேர்தலில் தமாகாவின் புதிய அரசியல் ஆட்டம்…!

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பேச்சு அரசியல்…

37 minutes ago

நள்ளிரவில் பயங்கரம்…! அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் படுகாயம்…. அலறி துடித்த பயணிகள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்றிரவு அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே…

41 minutes ago

இடைத்தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்…! இடதுசாரிகளுக்கு சீமான் ஆதரவு…? அனல் பறக்கும் அதிரடி பேச்சு…!!

தமிழக இடைத்தேர்தல் களம் சுடச்சுட சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு…

1 மணத்தியாலம் ago