தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை மீதா ரகுநாத். இவர் முதன்முதலாக முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தர்புகா சிவா இயக்கிய முதல் நீ முடிவும் நீ முன்னணி நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பள்ளி காலத்தை வைத்து எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ZEE 5 இன் பைவ் சிக்ஸ் செவன் 8 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இது முழுவதும் நடனம் தொடர்பான கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
இவர் தற்போது மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள குட் நைட் என்ற தமிழ் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் மீதா ரகுநாத்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னால் நடிகை மீதாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. சமீபத்தில் அந்த புகைப்படம் கூட இணையத்தில் வைரல் ஆகி வந்தது. அதைத்தொடர்ந்து மீதாவுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென திருமணத்தை முடித்து தன் கணவருடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்து உள்ளார், தற்போது அது மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
View this post on Instagram