அபிராமி.. அபிராமி.. குணா பட நடிகை என்ன ஆனார்..? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..?

By Deepika

Updated on:

தற்போது மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் நடித்துள்ள திரைப்படம் தான் மஞ்சுமேல் பாய்ஸ், இந்த திரைப்படத்தில் குணா படம் சம்பந்தப்பட்ட ஏகப்பட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. குணா குகை, கண்மணி அன்போடு காதலன் என ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது மஞ்சுமேல் பாய்ஸ். அதுமட்டுமல்லாமல் குணா உருவான விதம் குறித்து பல தகவல்களும் வெளியாகி வருகின்றன.

Actress roshini in guna

அந்தவகையில் குணா படத்தில் அபிராமியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்த நடிகை குறித்தும் பாலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கமலுடன் ஒரே ஒரு படத்தில் நடித்த அவர் குணா படத்திற்கு பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்தநிலையில் அவர் குறித்து சில விஷ்யங்கள் தெரிய வந்திருக்கிறது.

   
Roshini in guna

குணா படம் ஆரம்பிக்கும் போது கதாநாயகியின் தேர்வு தான் பெரும்பாடாக இருந்ததாம். முதலில் ஸ்ரீதேவி தான் அபிராமி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் கமலுடன் பல படங்களில் இணைந்து நடித்து விட்டதாம், ஹிந்தியில் பிஸியான காரணத்தினாலும் அவரால் குணாவின் நடிக்க முடியாமல் போனது. அதன்பின் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், மலையாளநடிகை சிவரஞ்சனி என பலரை அணுகியுள்ளனர். இறுதியாக தான் பம்பாய் மாடல் ரோஷினியை தேர்வு செய்திருக்கிறார்கள்.

Roshini as abhirami in guna

குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதி ரோஷினியின் புகைப்படங்களை பார்த்து அவரை அபிராமி கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்துள்ளார். ஆனால் ரோஷினி அந்த சமயத்தில் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். கமல் பட வாய்ப்பு என்றதும் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்துள்ளார். அவ்வளவு தான் படம் வெளியான நாள் முதல் இன்று வரை அபிராமியாக ரசிகர்களின் மனதில் குடிகொண்டு விட்டார் ரோஷினி.

Roshini as abhirami in guna

ரோஷினி அதன்பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்தநிலையில் ரோஷினி குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி குணா படத்திற்கு பின் ரோஷினி சில விளம்பர படங்களில் நடித்துவிட்டு, மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார். அதன்பின் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டாராம். ஆனால் இன்றும் அபிராமி என்றால் ரோஷினி தான் பலரின் ஞாபகங்களில் வந்து செல்கிறார்.

author avatar
Deepika