நகைப்பிரியர்களுக்கு இனிப்பான செய்தி.. தங்கம் விலை ரூ.5000 வரை குறையும்.. நிபுணர்கள் கணிப்பு..!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 20, 2026) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக, அடுத்த இரண்டு மாதங்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹3,000 முதல் ₹5,000 வரை குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தினாலோ அல்லது உலகளவில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்தாலோ இந்த விலை சரிவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சர்வதேச அளவில் தங்கம் விற்பனை அதிகரித்தாலும் அதன் விலை குறைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது படிப்படியாகச் சரிந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.