“ஒரே துறையில் ₹2,300 கோடி ஊழல்” அமைச்சர் கே.என்.நேரு மீது FIR.. அண்ணாமலை போட்ட குண்டு..!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது ₹888 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஓராண்டில் ஒரே ஒரு துறையில் மட்டும் சுமார் ₹2,300 கோடி ஊழல் நடந்திருப்பதாக அவர் மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். வேலை வாய்ப்புகளில் லஞ்சம் (₹888 கோடி), டெண்டர் முறைகேடுகள் (₹1,020 கோடி) மற்றும் இடமாற்றங்களுக்கான லஞ்சம் (₹365.87 கோடி) எனப் பல நிலைகளில் இந்த ஊழல் அரங்கேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமலாக்கத்துறை (ED) ஆதாரங்களுடன் கடிதங்களை அனுப்பியும், அமைச்சர் கே.என்.நேரு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இவ்வளவு பெரிய ஊழல் முறைகேடுகள் முதல்வரின் கவனத்திற்கு வராமலேயே நடந்திருக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஊழல் புகார்களுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, உடனடியாக மற்ற ஊழல் புகார்களிலும் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.