மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள ‘சாகர் ஸ்வீட்ஸ்’ என்ற பிரபல இனிப்புக் கடையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 24 காரட் தூய தங்க முலாம் பூசப்பட்ட ‘தங்கக் கொழுக்கட்டை’ விற்பனைக்கு வைக்கப்பட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி, குங்குமப்பூ மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த இனிப்பின் மீது E-175 என்ற அங்கீகரிக்கப்பட்ட 24 காரட் தூய்மையான, சாப்பிடக்கூடிய தங்கத் தகடு சுற்றப்படுகிறது. 2021-ல் கிலோ ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஆடம்பரக் கொழுக்கட்டை, தற்போது தங்கம் விலை உயர்வால் கிலோ ரூ.27 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக விலை இருந்தாலும், செல்வந்தர்கள் இதனை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
இதனிடையே, சாப்பிடக்கூடிய தங்கம் வயிற்று அமிலங்களுடன் எந்த வேதிவினையும் புரியாமல் கழிவாக வெளியேறிவிடும் என்றும், அதனால் உடலுக்கு எவ்வித ஊட்டச்சத்தோ நன்மையோ இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், நகைகள் செய்யப் பயன்படும் செம்பு, நிக்கல் கலந்த தங்கத்தைச் சாப்பிட்டால் கடுமையான நச்சுத்தன்மை ஏற்பட்டு உயிர் ஆபத்து நேரிடும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…