தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், நடந்து சென்ற பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் முழுவதும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இக்காலணொளிக் காட்சிகளின் அடிப்படையில் ஜன்காமா போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
