திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஊடக வட்டாரங்களில் ஊகங்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அதிருப்தி முகாமில் உள்ள தலைவர்களைத் தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் ஈர்ப்பதற்காகப் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை தீவிர வியூகம் வகுத்து வருவதாகவும், இதில் முன்னாள் அமைச்சர் ஒருவர் உட்பட 5 முக்கிய தலைவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. இருப்பினும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் இருந்தோ அல்லது அரசியல் கட்சிகளிடம் இருந்தோ இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது விளக்கமோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
