CINEMA
2024: தமிழ் சினிமாவுல இப்படி ஒரு வசூலை யாரும் பார்த்திருக்க மாட்டாங்க.. G.O.A.T வசூலை அடித்து கூறும் பிரேம்ஜி..!
கோட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. படத்தைப் பற்றி இயக்குனர் ஒரு பக்கம், தயாரிப்பாளர் ஒரு பக்கம் என அனைவரும் புதுப்புது அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார்கள். படத்தைப் பற்றி ஒரு பெரிய ஹைப் இல்லாதவரை படத்திற்கு நல்லது என்று சொன்ன அர்ச்சனா கல்பாத்தியே ரிலீஸ் தேதி நெருங்கும் வேலையில் புதுப்புது சர்ப்ரைஸ்களை கொடுத்து வருகின்றார்.
கோட் படம் தமிழ் நாடு முழுவதும் உள்ள ஆயிரம் திரையரங்குகளிலும் சோலோவாக ரிலீஸ் ஆகவுள்ளது. இதுமட்டும் இல்லாமல் மல்டி ஃப்ளக்ஸ் திரையரங்குகளும் உள்ளன. அவைகளைக் கணக்கில் எடுத்தால் படம் திரையிடப்படும் காட்சிகளின் எண்ணிக்கை, முதல் நாளிலேயே பல ஆயிரங்களை அசால்ட்டாக தாண்டிவிடும். ஐமேக்ஸ் திரையரங்கிலும் படம் ரிலீஸ் ஆகின்றது. படத்தின் முன் பதிவு தொடங்கி பல இடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் youtube சேனலில் பேட்டி கொடுத்த பிரேம்ஜி படத்தை பற்றி ஏராளமான தகவல்களை கூறியிருந்தார். படத்தில் பிரேம் செய்யும் விஜய்யும் மாமன் மச்சான் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லி இருக்கிறார். இதில் சினேகாவுக்கு தம்பி கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடித்துள்ளார்.
மேலும் 2024 இல் தமிழ் சினிமா வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது கோட் திரைப்படத்தின் வசூல் தான் டாப்பில் இருக்கும் என கூறியுள்ளார்.தனது அண்ணன் வெங்கட் பிரபுவிடம் கோட் திரைப்படம் சுமார் 1500 கோடி வசூல் குவிக்கும் என அடித்து கூறியதாக பிரேம்ஜி கூறியுள்ளார். இவர் கூறியது நிஜமாகுமா என அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம்.