CINEMA
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகரா? தயாரிப்பாளர்களிடம் சம்பளமே வாங்காம நடிச்ச நடிகர்.. யார் தெரியுமா..?
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, எஸ் எஸ் ராஜேந்திரன் மற்றும் முத்துராமன் என பலரும் திரையுலகில் கோலோச்சிய காலத்தில் தனக்கென தனித்துவமான நடிப்பை கொண்டு சினிமாவில் தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் தான் நடிகர் ஜெய்சங்கர். வக்கீல் குடும்பத்தை சேர்ந்த இவருக்கு சினிமாவில் மோகம். அதனால் பல கம்பெனிகளில் ஏறி இறங்கி வாய்ப்பு தேடினார். அப்போதுதான் ஜோசப் தளியத் என்ற இயக்குனர் இவருக்கு திறமை இருப்பதாக கருதி படத்தில் நடிக்க வைத்தார்.
அப்படிதான் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக ஜெய்சங்கர் நடித்தார். அடுத்ததாக இவர் நடித்த பஞ்சவர்ணக்கிளி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு வல்லவன் ஒருவன் மற்றும் சிஐடி சங்கர் என பிரம்மாண்ட திரைப்படங்களைத் தந்து அசத்தினார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட் வானியில் தமிழ் சினிமாவில் துப்பறியும் நிபுணராக வந்து அசத்தினார்.
இவருடைய நடிப்பை பார்த்து ரசிகர்கள் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்ற பட்டத்தை இவருக்கு கொடுத்து விட்டனர். எம்ஜிஆர் மற்றும் சிவாஜியை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்டவர்கள் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனால் அவர்களது அடுத்த சாய்ஸ் ஜெய்சங்கர் தான். ஏனென்றால் குறைந்த சம்பளத்தில் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித இடைஞ்சலும் தராமல் நடித்துக் கொடுத்தார். கால் சூட் சொதப்பல்கள் எதுவுமே இருக்காது.
அது மட்டுமல்லாமல் சில நேரங்களில் தயாரிப்பாளர்களிடம் சம்பளமே வாங்காமலும் நடித்துக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இவரைப் போன்ற ஒரு நடிகர்களை பார்ப்பது மிகவும் அரிது என பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இவரை பாராட்டியுள்ளனர். அந்த அளவிற்கு தன்னுடைய அசாத்திய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும், தனது குணத்தால் தயாரிப்பாளர்கள் மற்றும் சக நடிகர்களையும் மிரள வைத்தவர்.