Connect with us

குரு பகவானின் அருள் வேண்டுமா…? அப்போ இதைச் செய்யுங்க…

ASTROLOGY

குரு பகவானின் அருள் வேண்டுமா…? அப்போ இதைச் செய்யுங்க…

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு பகவான் என்றாலே நல்லவைகளை அள்ளிக் கொடுக்கும் கடவுள் தான். அதனால் குரு பகவான் அருள் கிடைக்க வேண்டும் ,குருவின் கடைக்கண் நம் மீது படாதா என்று பக்தர்கள் ஏங்குவர். குரு பகவானின் அருள் நமக்கு கிடைத்துவிட்டால் நம் வாழ்க்கையில் செல்வங்களும் தனம் தானியம் சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்கும். அப்படி குருபகவானின் பார்வையை நம் மீது விழச் செய்வதற்கும் அவருடைய அருள் கிடைப்பதற்கும் என்ன செய்யலாம் என்பதை இனி காண்போம்.

   

குருவின் திருவருள் பெற வேண்டும் என்று நினைத்தால் வியாழக்கிழமைகளில் குரு பகவானின் வழிபாடு செய்ய வேண்டும். குரு பகவானுக்கு பிடித்த நிறம் மஞ்சள். ஆகவே வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிற உடையை உடுத்திக் கொள்வது சகல வெற்றிகளையும் உங்கள் பக்கம் வந்து சேர்க்கும். அதேபோல் குரு பகவானுக்கு உகந்த தானியமாக கூறப்படுவது கொண்டக்கடலை ஆகும். குருவின் அருள் கிடைக்க கொண்டக்கடலையை தானம் செய்தால் நல்லவைகள் நடக்கும்.

   

திருமண தடைகள் அகல, குழந்தை பேரு உண்டாக, தொழில் விருத்தி அடைய நினைத்த வேண்டுதல்கள் நடக்க வியாழக்கிழமைகளில் குரு பகவான் சந்நிதிக்கு சென்று குருவின் பாதத்தில் கொண்டைக்கடலையை வைத்து உங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். குரு தட்சிணாமூர்த்தி அவர்களின் பாதத்திலும் கொண்டக்கடலையை வைத்து அர்ச்சனை செய்து வரலாம். அப்படி கோவிலில் குருவின் பாதத்தில் வைத்து வழிபட்டு எடுத்து வந்த கொண்டைக்கடலையை மறுநாள் வெள்ளிக்கிழமையில் செம்பு அல்லது பித்தளை செம்பில் தண்ணீர் முழுவதுமாக நிரப்பி அதில் ஊற வைக்க வேண்டும். அதில் கொஞ்சம் மஞ்சள் தூளையும் சேர்த்து கொள்ளலாம். பின்னர் கையை சொம்பின் மீது மூடி வைத்து ஓம் குருவே சரணம் என்கிற இந்த நாமத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

 

பின்னர் அந்த தண்ணீரை உங்கள் உச்சந்தலையில் படுமாறு தெளித்துக் கொள்ள வேண்டும். வீடு முழுவதும் அந்த தண்ணீரை மாவிலைக் கொண்டு தெளிக்கலாம். இப்படி செய்தால் வீட்டில் இருக்கும் சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். மீதம் உள்ளே இருக்கும் கொண்டை கடலையை வடிகட்டி அதை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து மூன்று வாரம் 21 நாட்கள் வரை கொண்டைக்கடலையை பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் குருவருள் கிடைக்கும். 21 வது நாளில் வரும் வியாழக்கிழமை அன்று குருவின் சன்னதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சள் நிற பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

பின்னர் அங்கு வரும் பக்தர்களுக்கு மஞ்சள் நிறத்தால் ஆன நெய்வேத்தியங்களை தானம் செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல் என ஏதாவது ஒரு பதார்த்தத்தை வீட்டில் இருந்தே செய்து கொண்டு வந்து பக்தர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இது தவிர வியாழக்கிழமை அன்று வீட்டிலிருந்தே வழிபட நினைப்பவர்கள் குரு பகவான் மந்திரத்தை எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை ஜெபிக்க வேண்டும். கொண்டைக்கடலையை நெய்வேத்தியமாக வீட்டில் விளக்கு முன்பு வைத்து குரு பகவானை நினைத்து வழிபட்டு வரலாம். இது தவிர அன்னதானம் செய்வது, கல்வி படிக்க இயலாத ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வது, ஊனமுற்றோருக்கு உதவி செய்வது போன்றவைகளை நாம் கடைப்பிடித்தால் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

Continue Reading
You may also like...

More in ASTROLOGY

To Top