என்னது, GOAT படத்தில் விஜயகாந்த் நடிக்கப்போறாரா..? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வெங்கட் பிரபு..

By Ranjith Kumar

Updated on:

தளபதி 67 வது படமான (GOAT) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், ஸ்ரீநிதி, S.J சூர்யா நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் AGS தயாரிப்பில் கல்பாத்தி அகோரம் புரொடியூஸ் செய்யும் இப்படம் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. வெங்கட் பிரபு விஜய் யுவன் சங்கர் ராஜா இவர்கள் கூட்டணியில் தயாராகும் இப்படத்திற்கு பெருமளவில் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

வெங்கட் பிரபு யுவன் சங்கர் ராஜா காம்போ என்றாலே அது அதிரி புதிரியாகத்தான் இருக்கும், இதனிடைய மக்களின் நாயகன் விஜய் அவர்கள் இணைந்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது. யுவன் வெங்கட் இருவரும் சேர்ந்தாலே அது ரசிகர்களுக்கு பிரியாணியாகத்தான் அமையும், அதுபோல இப்படமும் மக்களுக்கு பெரிய படையல் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, விஜயின் லியோ படம் ரிலீஸ் ஆன சில நாட்களில் கோட் படத்திற்கான படப்பிடிப்பு துவங்கியது, அப்பொழுது விஜய் அவர்கள் AI மூலம் அவரை கிராபிக்ஸ் செய்வதற்காக தயாரான பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மிகவும் வைரலானது.

   

இப்படத்தில் பட்டைய கிளப்பும் பைட் சீக்குவன்ஸி இருக்கும் என்று கூறுகிறார்கள், அதனால் இப்படத்தில் கிராபிக்ஸ் VFX அதிகமாக செய்யப்பட்டு வருகிறது இதில் இரண்டு கதாபாத்திரமாம், ஒரு விஜய் அப்பாவாகவும் மற்றொரு விஜய் மகனாகவும் நடிக்கிறார், அந்த மகன் கேரக்டரை VFX மூலம் வடிவமைத்து கொண்டிருக்கிறார்களாம், விஜய் பல படங்களில் டபுள் ஆக்ஷன் செய்துள்ளார், ஆனால் இப்படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, விஜயகாந்த் அவர்கள் செந்தூரப்பாண்டி படத்தில் விஜய் அவர்களை அறிமுகப்படுத்தி இருந்தார்,

விஜய் அவர்கள் விஜயகாந்த் அவர்களின் பெரிய ரசிகர், அவர் தன் அண்ணன் போல் என்று பல இடத்தில் கூறி இருக்கிறார், அதனால் விஜயகாந்த் அவர்களை தளபதி நடிக்கும் (GOAT) படத்தில் கேமியோ ரோலில் வரவழைப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது, தற்போது சில நாட்களுக்கு முன்னால் விஜயகாந்த் அவர்கள் காலமானார், அதனால் இப்படத்தில் AI மூலமாக விஜயகாந்த் அவர்களே ரீ-கிரியேஷன் செய்து இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சி யின் மூலமாக இவரை உருவாக்கி நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜயகாந்த் அவர்கள் இவ்வுலகை விட்டு சென்று விட்டார் என்று நினை நினைத்து வருந்தி இருக்கும் மக்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இப்படத்தில் விஜயகாந்த் அவர்களை AI மூலம் கொண்டு வருவதற்கான உரிமம் கேட்டு படக்குழு பிரேமலதா விஜயகாந்த் கேட்ட பொழுது, இப்படத்தை எடுத்து முடித்த பின் எங்களுக்கு இப்படத்தை போட்டு காட்ட வேண்டும் என்று, அதன் பின் தான் திரைக்கு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், விஜய் அவர்கள் விஜயகாந்தின் மேல் பெரிதும் அன்பு வைத்திருப்பதை காட்டுவதற்கான ஒரு நல்ல விஷயம் என்று ரசிகர்கள் பெரும் அளவில் இதற்கு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். செந்தூரப்பாண்டிக்குப் பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய்யும் விஜயகாந்த் அவர்களும் சேர்ந்து திரையில் காண்பதற்கு கோடான கோடி ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

author avatar
Ranjith Kumar