லியோ கூட போட்டி போட முடியாமல் தவிக்கும் GOAT.. படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

By admin on புரட்டாதி 10, 2024

Spread the love

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

   

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். மாபெரும் பொருட் செலவில் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான கோட் உலக அளவில் ஐந்து நாட்களில் 292 கோடி வரை வசூல் செய்துள்ளது.

   

 

முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் 5 நாட்களில் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருந்தது. ஆனால் கோட் திரைப்படம் 292 கோடி தான் வசூல் செய்துள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் 1000 கோடி வசூலை கோட் திரைப்படம் எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.