கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது… கண்திருஷ்டியை போக்க சிறந்த வழிகள் இதோ…

By Meena on செப்டம்பர் 10, 2024

Spread the love

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள். நம் பல வீடுகளில் திடீரென்று உடம்பு சரியில்லாமல் போகுவது திடீரென்று சண்டை சச்சரவுகள் ஏற்படும் போன்றவற்றை நாம் பார்த்திருப்போம். அது எதனால் வந்தது என்ன காரணம் என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம். என்னதான் இதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கண் திருஷ்டியால் பல வீடுகளில் பிரச்சனை ஏற்படுவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது உண்மையான ஒன்றுதான். அப்படி கண் திருஷ்டி ஏற்பட்டால் அதை எப்படி நீக்குவது என்பதை பற்றி இனி காண்போம்.

   

தற்போதைய காலத்தில் ஒருவர் முன்னேறிவிட்டால் அவன் எப்படி முன்னேறலாம் என்று கெடுப்பதே பலர் நோக்கமாகக் கொண்டிருப்பர். இது நமக்கு எதிர்மறையான எண்ணங்களை தரும். அந்த எதிர்மறையான எண்ணங்களையே கண் திருஷ்டி என்று கூறுவார்கள். வீட்டில் கண் திருஷ்டி பிரச்சனைகளை நீக்கவும் எதிர்மறை ஆற்றலை வெளியே அனுப்பவும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து வாரத்திற்கு ஒருமுறை தலையை மூன்று முறை சுற்றி தண்ணீரில் போடுவார்கள். பிறந்த குழந்தைக்கு திருஷ்டியை போக்க நல்ல வெள்ளை துணியை கிழித்து ஒரு அங்குலம் எடுத்துக்கொண்டு அதை தலை முதல் கால் வரை தடவி எரித்து விடுவார்கள்.

   

குடும்பத்தில் இருக்கும் அனைவரின் கண் திருஷ்டி நீங்க வீட்டு வாசல் தெருவில் இருக்கும் மண் கொஞ்சம் எடுத்து அதில் கடுகு, உப்பு, மூன்று காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து எல்லோரையும் நிற்க வைத்து அனைவரையும் சுற்றி அடுப்பில் போட்டு விட வேண்டும். இல்லையேல் முச்சந்தியில் எரிந்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை செய்வது நல்ல பலன்களைத் தரும்.

 

நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் இருப்பதற்கு வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சை 4, 5 பச்சை மிளகாய் சிறிய கரிக்கட்டை துண்டு ஆகியவற்றை கட்டி தொங்கவிடலாம். கற்றாழையை வீட்டின் வாசலில் தொங்கவிடலாம். இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை எலுமிச்சையை சரிபாதியாக வெட்டி ஒரு பாதியில் மஞ்சளையும் மறுப்பாதியில் குங்குமத்தையும் தடவி நிலை வாசல் படியின் இருபுறத்திலும் வைத்துவிட்டு ஒவ்வொரு வாரமும் அதை தூக்கி எறிந்தாலும் கண் திஷ்டி விலகும்.

படிகார கல்லை வீட்டின் முன்னே கட்டி தொங்க விட்டாலும் துர்சக்திகள் வீட்டுக்குள்ளே வராது. சிறு வயது குழந்தைகளுக்கு இளம் வயது சிறுவர் சிறுமிகளுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்க கருப்பு கயிற்றை கட்டிவிடலாம். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் கற்பூரம் தடவி வீட்டின் வாசலில் வைத்து எரிக்கலாம். இப்படி நம் வீட்டிலிருந்தே சில எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் கண் திருஷ்டியை நீக்கலாம்.