மனோஜுக்கு அடுத்த ஆப்பு ரெடி… மீனாவின் நல்ல மனசு… சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…

By admin on புரட்டாதி 10, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் விஜயாவுக்கு கொண்டு சென்ற சாப்பாடை மீனா வழியில் பசியோடு இருந்த தாத்தா பாட்டிக்கு கொடுத்து விடுகிறாள். பின்னர் ஐயையோ அத்தை கிட்ட எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறாள். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

   

இன்றைய எபிசோடில் மீனா விஜயாவிற்கு பிரியாணி வாங்கிக் கொண்டு செல்கிறாள். அப்போது விஜயா என்னாச்சு நீ சமைக்கலையா அப்படின்னு கேட்கிறாள். இல்ல அத்தை பூ கொடுக்குற அவசரத்தில அப்படியே வந்துட்டேன். அதான் உங்களுக்கு பிரியாணி வாங்கிட்டு வந்தேன் அப்படின்னு சொல்லி சாப்பிட வைக்கிறாள். பின்னர் அங்கிருந்து கிளம்புகிறாள்.

   

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த விஜயா நெஞ்செரிச்சலால் அவதிப்படுகிறார். ரோகிணி சீரக தண்ணி வைத்து கொடுக்கிறாள். பின்னர் அங்கு வந்த அண்ணாமலை என்னாச்சு விஜயா என்ன ஆச்சு என்று கேட்கிறார். உடனே இந்த மீனா பிரியாணி ஒன்னு வாங்கி தந்தா எனக்கு சேரல அப்படின்னு சொல்கிறாள். அந்த நேரத்தில் சரியாக முத்துவும் மீனாவும் வந்து விடுகின்றனர். அண்ணாமலை அதான் மதியம் மீனா சாம்பார் கீரை எல்லாம் செஞ்சுருந்தாலே கொண்டு வரலையா உனக்கு அப்படின்னு கேட்கிறார். என்னது சாப்பாடு செஞ்சிருந்தாளா அப்படின்னு விஜயா ஆச்சரியப்படுகிறார். அப்போ மீனா நான் தான் அத்தைக்கு பிரியாணி வாங்கிக்கொண்டு கொடுத்தேன் அப்படின்னு சொல்கிறாள்.

 

உடனே ரோகினி அப்போ கொண்டு போன சாப்பாடு என்ன செஞ்சீங்க அப்படின்னு கேட்கிறார். உடனே மீனா நடந்தது எல்லாம் கூறுகிறாள். அப்போது விஜயா என் வீட்டு சாப்பாடு தானம் கொடுக்கிறதுக்கு நீ யாரு அப்படின்னு சத்தம் போடுகிறாள். உடனே அண்ணாமலை அவ செஞ்சது ரொம்ப நல்ல விஷயம் ஒருத்தவங்களுக்கு சாப்பாடு இல்லன்னா சாப்பாடு போடுறது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுமா அப்படின்னு சொல்கிறார். உடனே முத்துவும் ஒவ்வொரு அரசியிலையும் அந்த அரிசி யாருக்கு போய் சேரனும்னு எழுதி இருப்பாராம் கடவுள் அதனால அந்த சாப்பாடு அவங்களுக்கு போய் சேரனும்னு இருந்திருக்கு நம்ம வீடுன்னா பெரிய தஞ்சாவூர் தானிய களஞ்சியம் இங்கிருந்து அள்ளிட்டு மீனா போய் கொடுத்திட்டா அப்படின்னு சத்தம் போடுகிறான்.

உடனே முத்து கிச்சனுக்கு போய் கல் உப்பு எடுத்து உன் மேல நிறைய திருஷ்டி இருக்கு மீனா அப்படின்னு மீனாவுக்கு திருஷ்டி சுத்தி போடுகிறான். உடனே விஜயா இவளோட ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்கு இதுக்கு சீக்கிரம் முடிவு கட்டணும் அப்படின்னு மனதில் நினைக்கிறாள். அடுத்ததாக மனோஜ் தனது ஷோரூமில் வந்து லெட்டர் கொடுத்த நபரை பற்றி யோசித்து கொண்டே இருக்கிறான். நடுராத்திரி எந்திரிச்சு உட்கார்ந்து அவன் கொடுத்த லெட்டரை பார்த்துக் கொண்டிருக்கிறான். இதனால் புது பிரச்சனை வந்துருமோ ஷோரூம்க்கு வந்து எதுக்காக இப்படி லெட்டர் குடுத்து இருக்கான் யார்கிட்ட போய் கேக்கறதுன்னு தெரியலையே ரோகிணி வேற நல்லா தூங்கிட்டு இருக்கா அப்படின்னு நினைச்சுட்டு இருக்கிறான். உடனே எழுந்து மொட்டை மாடிக்கு போய்விடுகிறான். மனோஜ் மொட்டை மாடிக்கு போன பிறகு அவனது அம்மா விஜயா விற்கு போன் செய்கிறான் செய்து மேலே வாங்கம்மா உன்கிட்ட பேசணும் அப்படின்னு கூப்பிடுகிறான். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.