சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இதன் முதல் பாகம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றது . தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலன் முதல் பாகத்தில் ஜனனி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் தான் நடிகை மதுமிதா.

முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த இவர் தான் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் மதுமிதா நடிக்கவில்லை. ஆனால் ஜனனி கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் மதுமிதா.

இவர் முதன்முதலில் 2019ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரியாத மனம் வேண்டும்’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். மேலும் இவர் தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலில் நடித்துள்ளார்.

தற்போது அய்யனார் துணை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை அசர வைத்துள்ளது. இதை பார்த்த ரசிகர்களோ ஹோம்லி பொண்ணா இருந்த மதுமிதா இப்படி மாற்றிட்டாங்களே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
