“புரூஸ்லி” பட நடிகர் காலமானார்… சோகத்தில் ஹாலிவுட் திரையுலகம்..!!

By Soundarya on ஆனி 26, 2025

Spread the love

பிரபல ஹாலிவுட் நடிகர் அகி அலோங் (90) காலமானார். ஞாபக மறதி பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்த அவர் கலிபோர்னியாவின் சில்மரில் உள்ள வீட்டில் மரணமடைந்தார். ஹாலிவுட்டில் நோ டவுன் பேமெண்ட், பிராட்டாக் மிஸ்ஸிங் இன் ஆக்சன் 3, பிரின்சிபல் எல்டர் இன் டிராகன்: தி புருஸ்லி ஸ்டோரி, தி குவெஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

டிரினிடாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அலியோங், தனது வாழ்க்கை முழுவதும் சிறுபான்மையினருக்காக வாதிட்டார், மேலும் ஏராளமான தற்காப்புக் கலைத் திரைப்படங்களிலும் பணியாற்றினார்.  இவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.