உங்கள் தனிப்பட்ட தரவுகளை திருடும் மொபைல் APPS.. உடனே உங்க போன செக் பண்ணுங்க.. இல்லனா ஆபத்துதான்..!

By Nanthini on ஆனி 26, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் பெரும்பாலானோர் தினமும் சோசியல் மீடியா இல்லாமல் வாழவே முடியாது என்ற சூழலில் தான் சிக்கி தவிக்கின்றனர். பொதுவாகவே நாம் தினமும் போனில் பயன்படுத்தக்கூடிய பல அப்ளிகேஷன்கள் நம்முடைய தனிப்பட்ட தரவுகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்ளும். இது ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு தெரிந்திருந்தாலும் அனைத்து அப்ளிகேஷன்களும் இப்படியா என்பது சந்தேகம்தான். அதனை எப்படி தடுப்பது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதே சமயம் பல அப்ளிகேஷன் மூலம் சேகரிக்கப்படும் தனிப்பட்ட தரவுகள் உங்களுக்கு பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். அதன்படி Apteco என்ற ஆய்வு நிறுவனம் அப்ளிகேஷன்கள் சேகரிக்க கூடிய தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களின் அளவைப் பொறுத்து நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதில் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய அப்ளிகேஷன்களின் டாப் 10 பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் facebook, instagram, Threads போன்ற அப்ளிகேஷன்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளது. இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் இருக்கலாம்.

   

இந்த அப்ளிகேஷன்கள் நம் தனிப்பட்ட தரவுகள் மற்றும் புகைப்படங்கள் மட்டும் அல்லாது வீடியோக்களை தனிப்பட்ட முறையில் சேகரித்து வருகின்றது. இப்படி சேமிப்பதற்கான ஆப்ஷனை நாம் டிசேபிள் செய்யாத வரை தொடர்ந்து நம் தரவுகள் அனைத்தும் இந்த செயலிகளுக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கும். ஆனால் நம் தரவுகளை எடுப்பதற்கான அனுமதியை டிசேபிள் செய்வதற்கான வாய்ப்பு ஐபோன் அல்லது ஐபேடில் மட்டும்தான் உள்ளது. நம் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் பிற அப்ளிகேஷன்களாக LinkedIn, Pinterest, Amazon, YouTube, X போன்ற பிற அப்ளிகேஷன்கள் இதில் முக்கிய இடம் பிடித்துள்ளன. இதனால் இந்த அப்ளிகேஷன்கள் பயன்படுத்துவதை நாம் நிறுத்தி விட வேண்டுமா என்றால் இந்த சூழ்நிலையை சமாளிக்க அப்ளிகேஷனை டெலிட் செய்வது ஒரு தீர்வாக இருக்காது என்று Apteco நிறுவனம் கூறுகிறது.

   

அதே சமயம் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதை குறைக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் ஆகிய இரண்டிலும் இதனை மேற்கொள்ள முடியும். ஊபர் மற்றும் zomato போன்ற அப்ளிகேஷன்களுக்கு நீங்கள் லொகேஷன் கொடுக்காவிட்டால் உங்களுக்கு சிறந்த டெலிவரி கிடைக்காமல் போகலாம். ஆனால் அதன் பயன்பாட்டை உங்களால் கற்றுக்கொள் வைக்க முடியும். இந்த அப்ளிகேஷனை நாம் பயன்படுத்தாமல் இருக்கும் போது அல்லது பேக்ரவுண்டில் அதன் செயல்பாட்டை குறைப்பு அதன் மூலம் இதனை நீங்கள் கட்டுப்படுத்தலாம். அதேசமயம் ஸ்டோரேஜ், லொகேஷன், கேமரா மற்றும் போன் லாக் செய்வதற்கான அனுமதியை மாற்றுவதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும் என கூறப்படுகிறது.